Tuesday, February 16, 2010

Birth of LingaBhairavi



பிறந்தாளே என் தாய்....
கருமேனி அவள் திருமேனியாய் ,
உக்கிர ஜ்வாலையாய், வீரத்திருமகளாய்,
அனல் பறக்கும் கண்களோடு,
அன்பே அவள் வடிவில்,
ஆனந்த அலை நடுவில்,
வெள்ளியங்கிரியில் பிறந்தாள் வீரத்திருமகள்,
அவள்தான் என்தாய் லிங்கபைரவி !

இனி என்ன வேண்டும்...
இப்பிறவியில் இனி எனக்கு
என்ன வேண்டும் நீஇருக்க,
நீ இருக்கும் இவ்வுலகில்
எனைகாக்க யார் வேண்டும்,
இவ்வுலகின் படைப்பைவிட
உன் படைப்பே பெரிதாக
எண்ணுகின்றேன் இப்பித்தன்!
பித்தனாய் அலைந்த நான்,
உனைக்கண்ட மறுகணமே
சித்தனாய் மாறினேனே!
இதுவல்லவோ மாற்றம்,
அன்பு, அன்பு என்று
தேடி அலைந்த இம்மனம்,
அன்புருவாய் உள்ளவளை
கண்டவுடன் கரைந்தேனே,
எவ்வுருவம் கண்டாலும்
கண்ணீரை காணாமனம்,
உனைக்கண்ட மறுகணமே
கண்ணீரே பெருங்கடலாய்
என்கண் காணக் கண்டேனே!
என்னவளே பைரவி!

ஓர் அதிசயம்...
மகன் கண்முன்னே தாய் பிறந்தாள்,
இவ்வதிசயம் கண்டீரோ, ஆம்,
படைப்பிற்கே அதிசயமாய்,
மகன் முன்னே தாய் பிறந்தாள்
அவளே லிங்கபைரவி !
--
சத்தியபிரபு,
ஈஷா தனார்வதொண்டன்,
சென்னை.
======================================================
இன்னுமொரு பிறவி வேண்டும்........
அணுவைக் காட்டிலும் நுட்பமான அளவுகோல் வைத்து
அனைவரையும் ஆட்டுவிப்பவளுக்கு பத்து கைகள் போதுமா?
அந்தோ பார்! அவளின் கம்பீரத்தை,
படைத்தவன் படைத்த ஆண் தன்மையின் கம்பீரம் எம்மாத்திரம்,
இவளோடு ஒப்பிடுகையில்?
என்னவென்று சொல்வேன் இக் கண்கொள்ளா காட்சியை?
நான் இப்பிறவியோடு எனை முடித்துக்கொள்ள ஆசைப்பட்டேன்,
ஆனால் இப்பொழுதோ, இவளைக் காண
இன்னுமொரு பிறவி வேண்ண்டுமென நினைக்கிறேன்....
ஏ சத்குரு நாதா! நீயே சொல்?
பதில் சொல்ல உனைத் தவிர வேரொருவர்
எவருமில்லை இவ்வுலகில் , சரிதானே நான்சொல்வது ?
-------------------------------------------------------------------------------------------------
சத்தியபிரபு
ஈஷா தன்னார்வத்தொண்டன்

1 comment:

  1. Anna ..is it possible to post this in english..it would be understandable for majority of the people.

    ReplyDelete